உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த மின் கம்பத்தால் அச்சம்

சேதமடைந்த மின் கம்பத்தால் அச்சம்

நரிக்குடி : நரிக்குடி சூரங்குளத்தில் வீதியின் நடுவில்சேதமடைந்துஆபத்தான நிலையில் மின் கம்பம் இருப்பதால் எப்போது ஒடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் அக்கிராமத்தினர் உள்ளனர்.நரிக்குடி சூரங்குளத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வீதியின் நடுவில் மின் கம்பங்கள் நடப்பட்டன. தற்போது சேதம் அடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிந்து, உறுதியற்ற நிலையில் உள்ளது. மழை நேரங்களில் பலத்த காற்றுக்கு ஒடிந்து விழும் ஆபத்து உள்ளது.வீதியின் நடுவில் இருப்பதால் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். குடியிருப்பையொட்டி உள்ளதால் வீட்டின் மேல் விழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளதையடுத்து அச்சத்தில் உள்ளனர்.விபத்திற்கு முன் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை