உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிறப்பு சான்றிதழில் பெயர்சேர்க்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பு மாவட்ட சுகாதார அலுவலர் தகவல்

பிறப்பு சான்றிதழில் பெயர்சேர்க்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பு மாவட்ட சுகாதார அலுவலர் தகவல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில், 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் டிச. 31க்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம், என விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி தெரிவித்தார்.மாவட்டத்தில் நகர், ஊரகப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக நகர், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் அந்தந்த பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டன. விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 2 நகர, 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 114 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது. சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 5 நகர, 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது.குழந்தை பிறந்ததும் நகர், ஆரம்ப சுகாதார நிலையங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரு வேளை பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காமல் பள்ளிகளில் படித்தால், அவர்களும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர், பாதுகாப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சான்றிதழில் பெயர் சேர்த்து வழங்கப்படுகிறது. தற்போது பெற்றோர், குழந்தைகள் பிறந்ததும் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்த்து விடுகின்றனர். ஆனால் வெகு சிலர் மட்டுமே பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காமல் உள்ளனர். இது குறித்து விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி கூறியதாவது: பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் பிறந்த நகர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு, இறப்பு பதிவாளர், தாசில்தார்களிடம் கருவூலத்தில் ரூ. 200 செலுத்திய இ--செலான், விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்த்து வழங்குவார்கள். பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் டிச. 31 க்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்