| ADDED : ஏப் 27, 2024 03:51 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு இறுதி கட்ட பயிற்சிகள் தீவிரமடைந்துள்ளன.மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களில் 77 ஆண்கள், 302 பெண்கள் உட்பட 379 பேருக்கும், உதவி பெறும் பள்ளி மாணவர்களில் ஆண்கள் 91, பெண்கள் 342 என 433 பேருக்கும் என 812 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் ஷத்திரியா வித்தியாசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் எஸ்.என்.ஜி., மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி என நான்கு மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இயற்பியல், வேதியியல், உயிரியல்ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்கள் மூலமும் பயிற்சி பெற்றுவருகின்றனர். மே 5ல் நீட் தேர்வு நடக்கிறது. இறுதி கட்ட பயிற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன.