உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெல்டிங் வைக்கும் போது தீ விபத்து: இருவர் காயம்

வெல்டிங் வைக்கும் போது தீ விபத்து: இருவர் காயம்

சிவகாசி: விருதுநகர்மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை வீரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குருவுராஜ் 45. இவருக்கு அதே பகுதியில் மாட்டுத் தொழுவம் உள்ளது. இங்கு பழைய பட்டாசுகள் சிறிதளவு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. மாட்டுத் தொழுவத்தில் ஆஸ்பெஸ்டாஸ் செட் அமைப்பதற்காக வி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த காந்திராஜ் 34, குருவுராஜ் மேற்பார்வையில் வெல்டிங் வேலை கொண்டிருந்தார். அப்போது தீப்பொறி பறந்து எதிர்பாராதமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசில் பட்டது. இதனால் ஏற்பட்ட விபத்தில் காந்திராஜ் ,குருவுராஜ் காயமடைந்தனர். அருகில் இருந்த வைக்கோலிலும் தீப்பிடித்தது. வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை