உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேற்குத்தொடர்ச்சி மலையில் 4வது நாளாக எரியும் காட்டுத்தீ

மேற்குத்தொடர்ச்சி மலையில் 4வது நாளாக எரியும் காட்டுத்தீ

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் நான்காவது நாளாக நேற்றும், பல கிலோமீட்டர் தூரத்திற்கு காட்டுத் தீ பற்றி எரிகிறது.கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மின்னல் தாக்கியதில் புற்கள் தீப்பற்றி, ராக்காச்சியம்மன் கோயில் முதல் விரியன் கோயில் வரை சுமார் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிந்து வருகிறது.வனத்துறையினர் ,தொடர்ந்து மூன்று நாட்களாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், தீயை அணைக்க முடியவில்லை.நான்காவது நாளாக நேற்றும் காட்டுத்தீ மேலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவி கொளுந்து விட்டு எரிந்தது. ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து காட்டுத்தீயை அணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ