உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இலவச உபகரணங்கள் வழங்கல்

இலவச உபகரணங்கள் வழங்கல்

சாத்துார் : கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் முகாம் மற்றும் அளவீடு செய்யும் முகாம் நடந்தது.கே .ஆர் .கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சென்னை பிரீடம் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.சி .எஸ் .ஆர் .வாரா பியூச்சர் எல். எல். பி. யின் நிதி உதவி உடன் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி, பிரீடம் டிரஸ்ட் இணைந்து 225 மாற்று திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால், கை, மூன்று சக்கர மிதிவண்டி, வாக்கர் வழங்கப்பட்டது.இம் முகாமில் சி.எஸ்.ஆர்.வாரா பியூச்சர் எல்.எல்.பி.யின் துணை மேலாளர் இளவேந்தன். பிரீடம் டிரஸ்ட் நிர்வாக குழு உறுப்பினர் சுதர்சன் ரெட்டி, முதல்வர்கள் காளிதாசன் முருகவேல், ராஜேஸ்வரன் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை