| ADDED : ஜூன் 04, 2024 05:42 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிலம்பப் போட்டியிலும் அபாகஸ் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.துபாய் சிலாங்கூர் நகரில் மே மாதம் சர்வதேச சிலம்பப் போட்டி நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா கத்தார், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கும் மாணவன் பரணிதரன் சிலம்பப் போட்டியில் தனித்திறமை பிரிவில் தங்கமும், அலங்கார சுற்று பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.இதேபோன்று துபாயில் குளோபல் கிட்ஸ் அபாகஸ் சார்பாக தேசிய அளவில் நடந்த போட்டியில் இதே பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் மிதுன்ராஜ் சிங்கிள் டிஜிட் போட்டியில் முதல் பரிசாக கேடயம் சான்றிதழ்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.