உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சொக்கலிங்கபுரத்தில் திரியும் பன்றிகளால் சுகாதார கேடு

சொக்கலிங்கபுரத்தில் திரியும் பன்றிகளால் சுகாதார கேடு

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் கூட்டமாக சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் நகராட்சி மயான ரோடு அருகில் உள்ள ஓடை தான் வாழ்விடமாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரிகின்றன.குடியிருப்போர் அவற்றை விரட்டினாலும் போவதில்லை. கழிவு நீரில் உருண்டு, பிறண்டு தெருக்களில் வலம் வருவதால் சுகாதார கேடாக உள்ளது.நகராட்சி சுகாதார பிரிவு எதையும் கண்டு கொள்வதில்லை. பன்றிகள் வளர்ப்பவர்களிடம் கண்ட இடங்களில் திரிய விட கூடாது எனவும், பன்றிகளை அடைத்து வைத்து வளர்க்கவும் அறிவுறுத்துவது இல்லை.இதனால் பன்றிகள் கட்டுப்பாடு இல்லாமல் நகரில் வலம் வருகின்றன. நகரில் பன்றிகள், நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை