உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் அஞ்சலகம் முன்குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

விருதுநகரில் அஞ்சலகம் முன்குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

விருதுநகர் விருதுநகர் தலைமை அஞ்சலகம் முன்பு குழாய் உடைந்து குடிநீர் வீணாகியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே தலைமை அஞ்சலகத்தின் வாசல் முன்பு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலம் ரோசல்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கு தேவையான குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இக்குழாய் போதிய பராமரிப்பு இன்றி சேதமானதால் ஒவ்வொரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் போதும் குடிநீர் வீணாகி ரோட்டில் ஆறாக ஓடுகிறது.இதனால் வீடுகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து செல்வதால் இதை அருந்துபவர்களுக்கு நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த குழாய் காரியப்பட்டி, மல்லாங்கிணர், புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு செல்லும் ரோட்டில் முறையாக பதிக்கப்படாமல் இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு பாழாகிறது.எனவே சேதமான குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுத்து மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை