உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிராமப்புறங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரிப்பு: சுகாதார வளாக பராமரிப்பின்மையே காரணம்

கிராமப்புறங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரிப்பு: சுகாதார வளாக பராமரிப்பின்மையே காரணம்

மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஊருணி கரைகள், கண்மாய் கரைகள், கருவேலம் வளர்ந்துள்ள நத்தம் புறம் போக்கு நிலங்கள் ஆகிய ஊரின் ஒதுக்குப்புறங்களை மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இவ்வாறு திறந்தவெளி அதிகம் உள்ள கிராமங்களில் முக்கிய சிக்கலாக இருப்பது செயல்படாத, பராமரிப்பற்ற சுகாதார வளாகங்கள் தான்.ஊராட்சி நிர்வாகங்கள் சுகாதார வளாகங்களை பராமரிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அதன் கட்டடங்கள், அவற்றின் கழிப்பறையின் கதவுகள் சேதமடைந்து பாழாகி வருகின்றன. கழிவறை கோப்பைகள் சேதமடைந்து விட்டன.மேலும் மோட்டார்கள் மோசமான நிலையில் சிதிலமடைந்துள்ளன. ஊராட்சிகள் தோறும் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரிப்பதற்கு சுகாதர வளாக பராமரிப்பின்மையே முதன்மை காரணமாக உள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் எளிதில் திறந்தவெளியை நாடுகின்றனர்.450 ஊராட்சிகளிலும் இந்த பிரச்னை தீராத ஒன்றாக உள்ளது. விருதுநகர் நகராட்சி பகுதியை யொட்டியுள்ள பாவாலி ஊராட்சி அய்யனார் நகரில் இன்று வரை அப்பகுதியினர் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதே போல் பிற நகராட்சி, மாநகராட்சி பகுதிகளை யொட்டி உள்ள வளர்ந்த ஊராட்சிகளிலும் கூட திறந்தவெளி அதிகரித்து வருகிறது.மத்திய அரசு செயல்படுத்திய துாய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகிறது. அத்திட்டம் செயல்படுத்தும் போது மட்டும் கழிப்பறை கட்டி பயன்படுத்திய மக்கள் அதற்கு பின் எந்த பராமரிக்காமல் விட்டுவிட்டனர். பல இடங்களில் அந்த கழிப்பறை சேதம் அடைந்துள்ளது. செங்கற்கள் பெயர்ந்து வந்துள்ளன. இதை அதிகாரிகளும் சரிவர ஆய்வு செய்யவில்லை.தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதார வளாகம் உள்ளது. ஆனால் அதன் பராமரிப்பு தான் கேள்விக்குறியாக உள்ளது. அதை முறையாக பயன்படுத்தி மகளிர் குழுவினரை கொண்டோ, ஊரில் உள்ள நபரை கொண்டோ பராமரித்தால் நிச்சயம் முழு செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.மாவட்ட நிர்வாகம் கைவிடப்பட்டுள்ள, பாழடைந்துள்ள சுகாதார வளாகங்களை செயல்படுத்த ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பின் தொடர் பராமரிப்பு செய்ய ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ