உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்து பகுதியில் ஆய்வு

விபத்து பகுதியில் ஆய்வு

விருதுநகர் : விருதுநகர் எம்.ஜி.ஆர்., சாலை, நான்கு வழிச்சாலை சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால் இது குறித்து கூட்டாய்வு நடத்தப்பட்டது.வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், டிராபிக் போலீசார் ஆகியோரை இணைத்து விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் முக்கிய ரோடான எம்.ஜி.ஆர்., சாலையும், நான்கு வழிச்சாலை சந்திக்கும் இடமான இந்த சந்திப்பு பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் நடந்து வருவதால் இது குறித்து கூட்டாய்வு செய்தனர். எச்சரிக்கைக்கு என்னென்ன அமைக்க வேண்டும் என கலந்தாலோசித்தனர். விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ