உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரேடியோ அதிர்வெண் அடையாளம் அறிமுகம்

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரேடியோ அதிர்வெண் அடையாளம் அறிமுகம்

விருதுநகர் : விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை கடத்தலை தடுக்கும் வகையில் ரேடியோ அதிர்வெண் அடையாளம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை கடத்தலை தடுக்கும் விதமாக தாய்க்கு பெயருடன் பச்சை நிற அடையாள அட்டை, அவரை மருத்துவமனையில் தங்கி பார்த்துக்கொள்பவருக்கு சிவப்பு நிற அடையாள அட்டை வழங்கப்படுகிறது. குழந்தையின் கையில் நீல நிறபட்டை பொருத்தப்படுத்தப்படுகிறது. இந்த அடையாள அட்டை இல்லாதவர்கள்மகப்பேறு வார்டில் இருந்து குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்லமுயன்றால் மருத்துவமனை வாசலில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் கருவி சப்தத்தை கொடுத்து அடையாளம் காண்பித்து விடும்.மேலும் தாய், உடன் தங்கி இருப்பவர்களும் அடையாள அட்டை இல்லாமல் குழந்தையுடன் வெளியே சென்றால் சென்சார் கருவி சப்தத்தை கொடுத்து அடையாளம் காண்பித்து கொடுத்து விடும். அதே போல மகப்பேறு மருத்துவமனைக்குள் செல்வதற்கு முன் அனுமதி இன்றி யாரும் செல்ல முடியாத வகையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ