உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பதித்த குழாயை அகற்றும் குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிடல் இல்லாமல் நடக்கிறதா பணிகள்

பதித்த குழாயை அகற்றும் குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிடல் இல்லாமல் நடக்கிறதா பணிகள்

விருதுநகர் : விருதுநகரில் தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் பதித்த குழாய் அகற்றப்படுவதால் திட்டமிடல் இல்லாமல் நடக்கிறதா என்ற கேள்வியும், வடிகால் வாரிய பணிகளால் ரோடு சிதிலமடைவதாலும் என மக்கள் குமுறுகின்றனர்.விருதுநகர் நகராட்சியில் புதிய தாமிரபரணி குடிநீர் திட்ட பணிக்கான குழாய் பதிக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது. இதில் விருதுநகர் அருப்புக்கோட்டை ரோட்டில் பாலத்தின் கீழ்ப்பகுதியில் 3 மாதங்களுக்கு முன் தாமிரபரணி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அகமது நகரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் தாமிரபரணி குடிநீர் இணைப்பு வழங்கப்படாததால் நகரின் சில பகுதிகளில் உப்பு சுவை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இணைப்பு பணியை ரயில்வே தண்டவாளத்தை கடந்து எடுத்து செல்ல வேண்டி உள்ளதாலும், அகமது நகர் குடிநீர் தொட்டியில் இணைப்பு கொடுக்கப்பட வேண்டி உள்ளதாலும் அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதற்காக அருப்புக்கோட்டை பாலத்தின் கீழ்ப்பகுதியில் ரயில்வே நிர்வாகம் வேறு பாதையில் குழாய் அமைக்க கூறியதால் ஏற்கனவே பதித்துள்ள குழாய்களை அகற்றி வருகிறது குடிநீர் வடிகால் வாரியம். ஏற்கனவே தற்போது மழை பெய்து வருவதால் அப்பகுதி ரோடுகள் மோசமான நிலையில் இருந்தது. தற்போது மேலும் மோசமான நிலையில் உள்ளன. திட்டமிடல் இல்லாமல் தானா குடிநீர் வடிகால் வாரிய பணிகள் நடக்கிறது என மக்கள் குமுறுகின்றனர். ரயில்வே நிர்வாகத்திடம் முன்பே பேசி இதற்கான வழித்தடத்தை கண்டறிந்திருந்தால் இரண்டு வேலை ஆகி இருக்காது என்கின்றனர் மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்