உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பால பணிக்கு மாற்று பாதை ஆவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அவசியம்

பால பணிக்கு மாற்று பாதை ஆவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அவசியம்

சிவகாசி : சிவகாசி அருகே செங்கமலநாச்சியார் புரத்தில் மூன்று விலக்கு ரோட்டில் ஆக்கிரமிப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.மாற்றுப் பாதையாக பயன்பட உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அருகே செங்கமல நாச்சியார் புரத்தில் திருத்தங்கல் ரோடு, சிவகாசி ரோடு, பழைய வெள்ளையாபுரம் ரோடு என சந்திப்பு உள்ளது. இந்த மூன்று ரோடுகளிலும் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளது. சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்சில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி உள்ள நிலையில் செங்கமல நாச்சியார்புரம் ரோடு மாற்று பாதையாக பயன்படுத்தப்பட உள்ளது. கனரக வாகனங்கள், பஸ்கள் என அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் சென்று வர உள்ளன. இயல்பாகவே இங்கு போக்குவரத்து நெருக்கடி உள்ள நிலையில் மாற்றுப் பாதையாக பயன்படுத்தும் போது வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே இரு நாட்கள் சோதனை முயற்சியாக இந்த வழியில் வாகனங்கள் வந்தபோது போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.இந்நிலையில் இங்கு மூன்று ரோடுகளிலுமே அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் ரோடு குறுகிவிட்டது. இதில் வாகனங்கள் எளிதாக சென்று வருவதில் சிரமம் ஏற்படும். எனவே செங்கமல நாச்சியார் புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை