உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காமராஜர் பிறந்தநாள் விழா

காமராஜர் பிறந்தநாள் விழா

சிவகாசி : சிவகாசி காமராஜ் வாசகசாலை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் சேர்மத்துரை தலைமை வகித்தார். மதி ஒருங்கிணைந்த மருத்துவமனை இயக்குனர் திலகபாமா, 2023 - 24 கல்வியாண்டு 10 ம் வகுப்பு, பிளஸ் டூவில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நல்லாசிரியர் விருது பெற்ற என்.பி.எஸ்.எஸ். ரத்தின நாடார் கனகம்மாள் ரோட்டரி மேல்நிலைப்பள்ளி முதல்வர் முத்துக்குமாரி கவுரவிக்கப்பட்டார்.சசி நகர் முருகேசன் பேசினார். காமராஜ் வாசகசாலை நிர்வாகிகள் சுருளி வேல் பாண்டியன், சக்திவேல், சம்பத், காளியப்பன் கலந்து கொண்டனர். தியாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ