உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எதிர்ப்பை மீறி கண்மாய் நீர் திறப்பு; பயிர்கள் பாழ் --விவசாயிகள் வேதனை

எதிர்ப்பை மீறி கண்மாய் நீர் திறப்பு; பயிர்கள் பாழ் --விவசாயிகள் வேதனை

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே மீன் பிடிப்பதற்காக கண்மாய் நீரை குத்தகைதாரர்கள் திறந்து விட்டதால் பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதுடன், விதைத்துள்ள உள்ளிட்ட உளுந்து பயிர்கள் பாழாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.தளவாய்புரம் அருகே அயன் கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கண்மாய் பாசனத்தை நம்பி ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் உள்ளன.இந்நிலையில் நேற்று கண்மாய் மீன் பாசி ஏழை குத்தகைதாரர்கள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் கால்வாய் ஏற்படுத்தி தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். இந்த தன்னிச்சை போக்கினை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகள் நஷ்டத்தில் விழுந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து நீர் பாசன தலைவர் ராமையா: கண்மாயில் தண்ணீரை திறந்து விடுவது குறித்தோ மடைகள் அடைப்பது குறித்து பாசன விவசாயிகளிடம் தகவல் கூறுவதில்லை. தற்போதைய நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் பதில் இல்லை. கண்மாய் திறந்து விட்டதால் கோடை பருவத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.வண்ண முத்து, விவசாயி: நெல் பயிரிட்டு இடைப்பருவமாக ஒரு வாரம் முன் உளுந்தை 30,000 செலவழித்து விதைத்துள்ளேன். இதேபோல் பல்வேறு விவசாயிகளும் தங்கள் பங்கிற்கு பயிர் தானியங்களை கோடை பருவத்திற்காக சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் திடீரென மீன்பிடி தாரர்கள் மண்அள்ளும் இயந்திரம் மூலம் நடுப்பகுதியில் இருந்து ஆழமாக தோண்டி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.தற்போது தண்ணீர் சூழ்ந்ததால் பயிர்கள் வீணாகிவிட்டது. மற்ற பயிர்களுக்கு கோடையில் தண்ணீருக்கும் வழியில்லை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை