உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி ரயில்வே ஸ்டேஷனில் வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று காலை 11:30 மணிக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கதிரேசன், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் சதீஷ்குமார் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் நுழைய முற்பட்டனர். போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.அதனையும் மீறி ஸ்டேஷனுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் தண்டவாளத்தில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஸ்டேஷன் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தி கலைந்து சென்றனர்.டி.எஸ்.பி.முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் சட்ட ஒழுங்கு , ரயில்வே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை