உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

விருதுநகர்: விருதுநகர் சட்டப் பணிகள் குழு சார்பில் அரசு மருத்துவக்கல்லுாரியில் ராகிங் தடைச் சட்டம் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாமில் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி டி.வி., ஹேமானந்த குமார் தலைமை வகித்து பேசினார்.அவர் பேசுகையில், ராகிங்கை மறந்து மாணவர்கள் படித்து மருத்துவராகி சேவை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் சட்ட உதவிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நாடலாம், என்றார்.முன்னதாக முகாமில் சார்பு நீதிபதி ஆர்.வி., ராஜகுமார், குற்றவியல் நீதித்துறை நீதிபதி கலை நிலா, வழக்கறிஞர் நாகராஜன், கல்லுாரி துணை முதல்வர் அனிதா, இன்ஸ்பெக்டர் பொன்மீனா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி