உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாரணாபுரத்தில் பாசி படர்ந்த ஊருணி: துார்வார கோரிக்கை

நாரணாபுரத்தில் பாசி படர்ந்த ஊருணி: துார்வார கோரிக்கை

சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் எதிரே ஊருணியை துார்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் எதிரே ஊருணி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு குளிக்க துணி துவைக்க மற்றும் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்த இந்த ஊருணி துார்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது பெய்த கோடை மழைக்கு ஊருணிக்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் ஊருணி முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது.இதனால் தண்ணீர் எதற்கும் பயன்படாமல் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதனால் அருகே உள்ள ஊராட்சி அலுவலகம், இ சேவை மையம் ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வருகின்ற மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ஊருணியை துார்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை