உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமிக்கு தொல்லை தந்த தாயின் 2வது கணவர் கைது

சிறுமிக்கு தொல்லை தந்த தாயின் 2வது கணவர் கைது

விருதுநகர்; சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண்ணின் இரண்டாவது கணவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.விருதுநகரைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, ஆறாம் வகுப்பு படிக்கிறார். இவரின் தந்தை இறந்து விட்டதால், தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தாயின் இரண்டாவது கணவர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அவரை, விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ