உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை எரிப்பதால் புகைமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை எரிப்பதால் புகைமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர், : விருதுநகரில் நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை எரிப்பது வாடிக்கையாக தொடர்வதால் புகைமூட்டம் அதிகரித்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.விருதுநகர் நான்கு வழிச்சாலை ஓரங்களில் இரவோடு இரவாக பலர் குப்பையை கொட்டி செல்கின்றனர். இதனால் காற்றில் பறந்து கார் போன்ற வாகனங்களின் முன்புற கண்ணாடியை குப்பை மறைப்பது அதிகமாகி உள்ளது.இதே போல் தற்போது இலையுதிர் காலம் என்பதால் காய்ந்த சருகுகளை இங்கு கொட்டி எரிப்பதையும் சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் புகை மூட்டம் அதிகளவில் பரவி வருகிறது.மாவட்ட நிர்வாகம் ராஜபாளையத்தை கார்பன் சமநிலை கொண்ட பகுதியாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் அதில் தேவையற்ற முறையில் குப்பை எரிப்பது உள்ளிட்ட விஷயங்களை தவிர்க்க அறிவுறுத்தி வருகின்றனர். கார்பன் மோனாக்ஸைடு வெளியிடும் பெட்ரோல் வாகன பயன்பாட்டை குறைத்து எலெக்ட்ரிக் வண்டிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டியது மாவட்டத்தின் பிற பகுதிகளும் தான்.விருதுநகரில் குப்பை எரிப்பதும், சருகுகள் எரிப்பதும் அதிகளவில் தொடர்வதால் காற்றில் வெப்பத்தில் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க உள்ளாட்சிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளன.நேற்று முன்தினம் நான்கு வழிச்சாலை ஓரங்களில் எரிக்கப்பட்ட குப்பையால் புகைமூட்டம் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கண்ணாடிகளை அடைத்து கொண்டு வாகனங்களை ஓட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை