உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.மாரியம்மன் கோயில் கிழக்கு மற்றும் மேற்கு, ஊரணிபட்டி, மாயாண்டி பட்டி, கீழச்சிவந்திப்பட்டி, முதலியார்பட்டி, காந்தி நகர் தெருக்களில் முளைக்கொட்டு திருவிழா கடந்த வாரம் துவங்கியது.ஒவ்வொரு தெருவிலும் உள்ள கோயில்களில் முளைப்பாரி போடப்பட்டு இரவு 10:00 மணிக்கு பெண்கள் கும்மி அடித்து அம்மன் போற்றி பாடல்களை பாடுவர்.முளைப்பாரி ஊர்வலம் நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கி பெரிய மாரியம்மன் கோயில் வந்தனர். அங்கு அம்மனை தரிசித்து ராமகிருஷ்ணாபுரம் வழியாக பட்டத்தரசி அம்மன் கோயில் சென்று வணங்கினர். பின்னர் அப்பகுதியில் இருந்த நீர் நிலையில் முளைப்பாரிகளை கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை