மேலும் செய்திகள்
பல்கலையில் துவக்க விழா
19-Aug-2024
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் துறை சார்பில், நெக்ஸ்ட் ஜெனரேஷன் கிரிப்டோகிராபி இன்னோவேஷன் டிரைவிங் நெட்வொர்க் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், டீன் தீபலட்சுமி, துணைத் தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.கருத்தரங்கில் ஆராய்ச்சி இயக்குனர் பள்ளி கொண்ட ராஜசேகரன், பேராசிரியர்கள் செந்தில்குமார், குண்வார் சிங், வாசுதேவன் பேசினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சாம் பிரதீப் ராஜ், சுதேந்திரன் செய்திருந்தனர்.
19-Aug-2024