உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் ஆக்கிரமிக்கப்பட்ட நெல் களம்

ஸ்ரீவி.,யில் ஆக்கிரமிக்கப்பட்ட நெல் களம்

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் பாசனத்திற்கு உரிய நெல் களத்தின் நிலம் ஆக்கிமிரப்பு தொடர்பாக அதிகாரிகள் அளவீடு செய்தனர்.பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் பயன்பாட்டிற்காக வருவாய்த்துறை சார்பில் சுமார் 4 ஏக்கர் நிலம் நெல் களமாக வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது. நெல் களத்துக்குரிய நிலத்தின் எல்லைகளை அளவீடு செய்து தரக்கோரி விவசாய சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து வருவாய்த்துறை சர்வேயர்கள், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் நேற்று காலை 11:00 மணி முதல் சுமார் 3 மணி நேரம் நெல்கள நிலங்களை அளவீடு செய்தனர். விவசாய சங்க நிர்வாகிகள் மோகன்ராஜ், ரமேஷ், விவசாயிகள் உடனிருந்தனர்.அளவீடுகள் செய்த இடத்தில் தற்போது ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அதனை அகற்றி நெல் களம் மற்றும் அரசின் நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை