உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிலுவை மனுக்கள் விவரங்களின்றி குறைதீர் கூட்டத்தில் அலுவலர்கள்

நிலுவை மனுக்கள் விவரங்களின்றி குறைதீர் கூட்டத்தில் அலுவலர்கள்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் நிலுவை மனு விவரங்களின்றி பங்கேற்கும் அலுவலர்களால் தீர்வு காண்பதில் சுணக்கம் நீடிக்கிறது.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கள் கிழமையை முன்னிட்டு மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் நிலுவை மனு விவரங்கள் குறித்து டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் கேட்டார். அதிக நிலுவை உள்ள துறை அதிகாரிகளிடம் அது பற்றி விளக்கம் கேட்ட போது அது குறித்தான விளக்கங்களை சரிவர அளிக்கவில்லை. இதனால் மனுக்களின் நிலையை ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.இதற்கு முக்கிய காரணம், ஒவ்வொரு முறையும் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு அலுவலர்கள் அனுப்பப்படுவது தான். இதனால் மனு ஏன் நிலுவையில் உள்ளது என அடுத்த வாரம் புதிதாக வரும் நபர்கள் தெரிந்து கொள்வதில்லை. மாவட்ட நிலை அலுவலர்களும் மாதம் ஒரு முறையாவது பங்கேற்க வேண்டும். அவர்களும் தவிர்த்து வருகின்றனர். ஏற்கனவே விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நிறைய அலுவலர்கள் வரவில்லை என்ற புகார் எழுந்தது.இந்நிலையில் தற்போது குறைதீர் கூட்டத்தில் நிலுவை மனு பற்றிய விவரம், துறை ரீதியான எந்த தெளிவும் இன்றி சில அலுவலர்கள் வருவதால் மக்கள் குறைகளை தீர்ப்பதில் சுணக்கம் நீடிக்கிறது. இதனாலயே பல மனுக்கள் 3 மாதங்கள் கடந்தும் நிலுவையில் உள்ளன. இதற்கு நிரந்த தீர்வு காண அலுவலகத்திற்கு ஒரே அலுவலரையும், மாதந்தோறும் மாவட்ட நிலை அலுவலரையும் பங்கேற்க செய்வது தான் வழி ஆகும். மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ