உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் மின் மோட்டார் மூலம் குடிநீர் ஊறிஞ்சுவது அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

சாத்துாரில் மின் மோட்டார் மூலம் குடிநீர் ஊறிஞ்சுவது அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

சாத்துார், : தற்போது அடித்து வரும் வெயிலில் சாத்துாரில் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதால் மேடான பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் தொடர்ந்து நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக மூன்று தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தற்போது நகரில் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஓட்டல்கள், லாட்ஜ்கள், வணிக வளாகங்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிக அளவில் குடிநீர் மோட்டார் மூலம் எடுக்கப்படுவதால் மேடான பகுதிக்கு குடிநீர் செல்லாதநிலை உள்ளது.தற்போது குடிநீர் தேவையானஅளவு கிடைத்துவிடும் நிலையில் கோடை காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது வரும் குடிநீர் அளவு குறையும் நிலை உள்ளது.எனவே முறையான அனுமதி இன்றி வீடுகள் ஓட்டல்கள், லாட்ஜிகள் கடைகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து நகராட்சி நிர்வாகம் இதனை பறிமுதல் செய்வதன் மூலம் பொது மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் கிடைக்க வழிவகை பிறக்கும். ஆனால் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர் இதனால் மேடான பகுதி மக்கள் திண்டாடி வருகின்றனர்.கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து அனைத்து தரப்பினருக்கும் குடிநீர் கிடைக்க செய்யலாம். என மக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை