உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பேனாவால் குத்தி மூதாட்டி கொலை

பேனாவால் குத்தி மூதாட்டி கொலை

விருதுநகர்:விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டைச் சேர்ந்தவர் வேலம்மாள் 75. இவர் மகள் லதா வீடு அருகே வசித்து வந்தார். நேற்று மதியம் வேலம்மாளுக்கு லதா உணவு கொடுத்து விட்டு சென்றார். மாலை 4:00 மணிக்கு லதா அவரது வீட்டிற்கு சென்ற போது பால்பாய்ன்ட் பேனாவால் வேலம்மாள் கண், கழுத்து, மார்பு, வயிற்று பகுதிகளில் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.அப்பகுதியினர் கூறியதாவது: அடையாளம் தெரியாத முதுகில் பேக் அணிந்த நபர் மூதாட்டியின் வீடு அருகே மதியம் 3:00 மணிக்கு நின்று நோட்டமிட்டுள்ளார். அந்த நபரை பார்த்தவுடன் சந்தேகம் எழுந்ததால் அருகே வசிப்பவர்கள் திட்டி, அங்கிருந்து செல்லும்படி கூறினர். இதனால் அங்கிருந்து அவர் சென்று விட்டார். அந்த நபர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கிழக்கு போலீசார் அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி