உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு; ஆர்வமுடன் வந்த மாணவர்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு; ஆர்வமுடன் வந்த மாணவர்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கோடை விடுமுறைக்கு பின் ஒன்றுமுதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்களுக்கு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன.விருதுநகர் மாவட்டம் 2023--24ம்கல்வியாண்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 5ம், 10ம் வகுப்பு தேர்வில் 6ம் இடமும் பிடித்தது. தற்போது புதிய கல்வியாண்டான 2024--25துவங்கி உள்ளது. ஜூன் மாத முதல் வாரத்தில் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் வெயில் காரணமாக 10ம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று மாவட்டத்தில்அரசு துவக்கப்பள்ளிகள் 643, உதவி பெறும் பள்ளிகள் 343, தனியார் பள்ளிகள் 104 என 1090 துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 228, உயர்நிலைப்பள்ளிகள் 150, மேல்நிலைப்பள்ளிகள் 246 என 1714 பள்ளிகள் திறக்கப்பட்டன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தனர். ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பின் நேற்று மாணவர்கள் மகிழ்ச்சியோடு வருகை தந்தனர்.எல்.கே.ஜி., யூ.கே.ஜி., மழலை வகுப்புகளுக்கும் மாணவர்கள் வந்தனர். இதில் குழந்தைகள் பல பள்ளிக்கு வருவதற்கு அடம்பிடித்தன. பெற்றோர் ஒரு வழியாக தேற்றி பள்ளிக்கு அழைத்து வந்தனர்.சில பள்ளிகளில் வந்த அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை