உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பூங்காக்கள்

பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பூங்காக்கள்

சாத்துார் : வேலைகள் முடிந்து திறக்கப்படாத பூங்காக்கள், சுகாதார வளாகங்களை திறக்க சாத்துார் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.சாத்துார் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. கமிஷனர் ஜெகதீஷ்வரி, இன்ஜினியர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் விவாதம் பின்வருமாறு:கணேஷ் குமார் (ம.தி.மு.க.): 3வது வார்டில் 2 பூங்கா, பஸ் ஸ்டாண்டில் பொது சுகாதார வளாகம் வேலை முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது.சுப்புலட்சுமி (ம.தி.மு.க): 1வது வார்டில் ரோட்டில் மாடுகள் உலா வருகின்றன. பூங்காவில் படுத்துக் கொள்கின்றன. பொதுமக்கள் பயப்படுகிறார்கள்.சங்கர் (தி.மு.க): தெற்கு ரத வீதியில் சமுதாயகூடம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.மரியசிரஞ்சீவி (தி.மு.க): திறந்தவெளியில் உள்ள பொதுகிணறை மூடவேண்டும். சாக்கடை தள்ள ஆட்கள் வரவில்லை. பொன்ராஜ் (தி.மு.க): மேலக்காந்திர நகர் அங்கன்வாடி பள்ளிக்கு குடிநீர் குழாய் தேவை.இன்ஜினியர்: நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை