உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் உணவகங்கள் அமைக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் உணவகங்கள் அமைக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு பசித்தால் உண்பதற்கு கூட வளாகத்தில் நல்ல உணவகம் இல்லை. இதனால் பசியுடன் பயணிக்க வேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உணவகங்கள் அமைக்க கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விருதுநகரில் அதிகரித்த மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தி மக்கள் சிரமமின்றி பயணிக்க 1992ல் புது பஸ் ஸ்டாண்ட் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் வைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும் கடந்தாண்டு ஆக. 21ல் இருந்து முழு மறுபயன்பாட்டிற்கு வந்தது.இங்கிருந்து அரசு விரைவு பஸ்கள், சிவகாசி, கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும் அரசு பை பாஸ் ரைடர்கள், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்பட துாரப்பகுதிகளுக்கும் அரசு, தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பயணிகளின் கூட்டம் எப்போதும் உள்ளது. ஆனால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பயணிகளுக்கு பசித்தால் உண்பதற்கு கூட நல்ல உணவகங்கள் இல்லை. வெளியூர் செல்லும் பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்கும் போது வெளியே சென்று உணவு உட்கொண்டு வரவேண்டியுள்ளது.வெளிப்பகுதிகளில் உள்ள கடைகள் எப்போதும் திறந்திருப்பதில்லை. இதனால் சரியாக உணவு உட்கொள்ள முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உணவகங்கள் அமைக்க நகராட்சி நிர்வாகம் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை