உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மூன்று மாடுகளை நகராட்சி ஊழியர்கள்பறிமுதல் செய்து உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம்அபராதம் விதித்துஉள்ளனர்.பராமரிப்பற்று சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபராதம் மற்றும் பறிமுதல் செய்ய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுஇருந்தார். இதனையடுத்து ராஜபாளையம் நகராட்சி கமிஷனர் நாகராஜன் தலைமையிலான ஊழியர்கள் சத்திரப்பட்டி ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையில் சுற்றித்திரிந்த அழகை நகரை சேர்ந்த லட்சுமணனுக்கு சொந்தமான மூன்று மாடுகளை பறிமுதல் செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்துஉள்ளனர். மேலும் பராமரிப்பு செலவாக நாள் ஒன்றுக்கு ரூ. 500ம், இரண்டாவதுமுறையாக மாடுகள் சுற்றி திரிந்தால் ரூ.10 ஆயிரமும், மூன்றாவது முறை குற்றம் நடந்தால் பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலம் விடப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ