உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்தை தவிர்க்க ஆவியூர் மந்திரி ஓடையில் சர்வீஸ் ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

விபத்தை தவிர்க்க ஆவியூர் மந்திரி ஓடையில் சர்வீஸ் ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி; அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளான ஆவியூர், மந்திரிஓடையில் நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்ட பின் காரியாபட்டி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரிவு ரோடுகளில் முறைப்படி வழிகள், சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை.வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வருவதால் அதி வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.காரியாபட்டி மந்திரிஓடை அருகே நரிக்குடி செல்ல பழைய ரோடு இருந்தது. தற்போது அந்த ரோடு இருக்கும் இடம் தெரியாமல் போனது. இதனால் நரிக்குடி வழியாக செல்லும் வாகனங்கள் ரோட்டை கடக்க முற்படும்போது விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். அதேபோல் ஆவியூரில் சர்வீஸ் ரோடு இல்லாததால் ரோட்டை கடக்க முயன்ற போது பலர் வாகனம் மோதி பலியாகினர். இதனால் அக்கிராமத்தினர் ஆத்திரமடைந்து ரோட்டில் மிகப்பெரிய தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆகவே நான்கு வழிச் சாலையில் தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடு ஏற்படுத்தி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை