உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு தொழிலாளர்களுக்கு திட்டங்கள் செல்வப்பெருந்தகை பேச்சு

பட்டாசு தொழிலாளர்களுக்கு திட்டங்கள் செல்வப்பெருந்தகை பேச்சு

விருதுநகர் : ''பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உரிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் ''என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.விருதுநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் நலிவுற்றதற்கு மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி., தான் காரணம். காங்., தேர்தல் வாக்குறுதியில் பெண்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கான திட்டங்கள் உள்ளது. பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உரிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். முன்னாள் முதல்வர் காமராஜ் ஆட்சியை தருவோம் என துவங்கிய ச.ம.க.,வை எதற்காக சரத்குமார் பா.ஜ., வுடன் இணைத்தார். தே.மு.தி.க., விஜயகாந்த் இனி அ.தி.மு.க.,வுடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என தெரிவித்தார். ஆனால் தற்போது பிரேமலதா அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்து விருதுநகரில் மகனை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இதில் நகராட்சித் தலைவர் மாதவன், மாவட்ட காங்., தலைவர் ராஜா சொக்கர் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை