உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

தற்கொலைசாத்துார்: சாத்துார் என்.வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் ஜெயசிங்கராஜ், 48. கொத்தனர். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுவுடன் விஷம் கலந்து குடித்து மயங்கினார்.கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் ஒருவர் பலிசாத்துார்: சாத்துார் அருகே சின்னத்தம்பியாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 50. என்.வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள வள்ளி மில்லில் பணிபுரிந்து வந்தார். மே 2 மாலை பணி முடிந்து டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) ஊர் திரும்பினார். என்.வெங்கடேஸ்வரபுரம் விலக்கு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். கோவில்பட்டி நோக்கி சென்ற கார் டூவீலர் மீது மோதியதில் முத்துப்பாண்டி பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் கீழ்பாண்டவர் மங்களத்தை சேர்ந்தகார் டிரைவர் மதன் மீது சாத்துார் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தகராறு: 5 பேர் மீது வழக்குகாரியாபட்டி: காரியாபட்டி கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கமாரி, காசிபாண்டியன். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருதரப்பினரும் தகாத வார்த்தையில் பேசி தாக்கி கொண்டனர். மீனா, சத்தியமூர்த்தி, காசி பாண்டியன், சதீஷ்குமார் மீதும், தங்கமாரி மீதும் ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பட்டாசு திரி பறிமுதல்விருதுநகர்: திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த பாண்டித்துரை 35. இவர் எவ்வித அரசு உரிமமும், அனுமதியும் பெறாமல் 2 குரோஸ் மிஷின் திரிகளை ஓ.முத்துலாபுரத்தில்உள்ள அவருக்கு சொந்தமான ஷெட்டில் விற்பனைக்கு வைத்திருந்தார். பறிமுதல் செய்து ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.கிணற்றில் இளைஞர் உடல்ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் ராம் 21. அதே பகுதியை சேர்ந்த இசக்கி ராஜ் என்பவருக்கு சொந்தமான 200 ஆடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அய்யனார் கோயில் அருகே குத்தகைக்கு எடுத்த முருகனின் காட்டில் ஆட்டுக்கிடை போட்டு தங்கி இருந்துள்ளனர். கிடையில் இருந்த பிரசாத் ஆடுகளை அடைத்துவிட்டு கிணற்றில் சென்று பார்த்தபோது கணேஷ்ராம் இறந்து கிடந்துள்ளார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்