உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

பட்டாசு பறிமுதல்: 5 பேர் கைதுசாத்துார்: முத்தால் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் வீரபாண்டியன், வரலெட்சுமி, இவர்கள் வீட்டின் அருகில் தகர செட் அமைத்து சிவ காசியை சேர்ந்த ராஜாகனி, சீனிவாசன், சிந்தப் பள்ளி, சேர்மத்தாய், ஆகியோர் பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தனர். எஸ்.ஐ.,கள் கேசவன், அருண்குமார் தலைமையில் சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். டூவீலர்கள் மாயம்விருதுநகர்: சின்னவாடியூரை சேர்ந்தவர் சுப்புராஜ் 37. சிமின்ட் பாக்டரியில் டூவீலரில் வேலைக்கு வந்தவர் ஆர்.ஆர்., நகர் பாலத்திற்கு அடியில் நிறுத்தினார். மாலை வேலை முடிந்து வந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை. வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதே போல் விருதுநகர் வேலுச்சாமி நகர் கச்சேரி ரோட்டை சேர்ந்த அங்குச்சாமி 38, இரவு தன் வீட்டு வாசலில் டூவீலரை நிறுத்தியிருந்தார். உறங்கி காலை எழுந்து பார்க்கையில் டூவீலரை காணவில்லை. ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை