உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

டூவீலர்கள் திருட்டுவிருதுநகர்: வாடியான் தெருவைச் சேர்ந்தவர் பிரவின்குமார் 33. இவர் டூவீலரை ஏப் 23 அதிகாலை 1:40 மணிக்கு வீட்டின் வாசல் முன்பு நிறுத்திவிட்டு மதியம் 1:00 மணிக்கு வந்து பார்த்த போது திருடு போனது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.அதே போல திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் சந்தனக்குமார் 20. இவர் டூவீலரில் திருப்பூரில் இருந்து கல்லிடைக்குறிச்சி செல்வதற்காக ஜூன் 14 அதிகாலை 3:00 மணிக்கு விருதுநகர் - சாத்துார் நான்கு வழிச்சாலைக்கு வந்தார். அப்போது டூவீலரை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிப்பதற்காக சென்று திரும்ப வந்து பார்த்த போது டூவீலர், பவுச்சில் வைத்திருந்த செல்போன் திருடு போனது தெரிந்தது. சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.ஊருணியில் மிதந்த ஆண் பிணம்விருதுநகர்: கூரைக்குண்டைச் சேர்ந்தவர் கருப்பசாமி 45. இவர் ஜூன் 23 மது குடித்து விட்டு மாலை 4:00 மணிக்கு வீட்டுக்கு வந்தவர் இரவு வீட்டில் தங்காமல் வெளியே சென்றார். இவர் ஜூன் 24 மாலை 4:30 மணிக்கு ஊருணியில் இறந்த நிலையில் கிடந்தார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.மின்கசிவால் வீடு எரிந்து சேதம்விருதுநகர்: செங்கோட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் 38. இவரின் வீடு ஜூன் 22 மாலை 5:00 மணிக்கு மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.பாலியல் சீண்டல்: வாலிபர் கைதுவிருதுநகர்: விருதுநகர் இந்திராநகரைச் சேர்ந்தவர் முத்து 45. இவரின் கணவர் சிவலிங்கம் இறந்து விட்டதால் சித்தாள் வேலை செய்து வருகிறார். இரு மகன்களும் வெளியூரில் வசிக்கின்றனர்.இந்நிலையில் முத்து ஜூன் 24 அதிகாலை 3:00 மணிக்கு காற்றோட்டத்திற்காக வீட்டை திறந்து வைத்து துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது இவரின் வீட்டிற்குள் நுழைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் தீபக் 20, பாலியல் சீண்டல் செய்துள்ளார். மேற்கு போலீசார் தீபக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை