உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் செய்திகள் விருதுநகர்

போலீஸ் செய்திகள் விருதுநகர்

பட்டாசு பறிமுதல்சிவகாசி: பேராபட்டி மேலத் தெருவை சேர்ந்தவர் விஜய் 29. இவர் தனது வீட்டில் அரசு அனுமதி இன்றி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.தற்கொலைசிவகாசி: லிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 50. மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் வேலை பார்க்கும் பணத்தை வீட்டு செலவிற்கு தராமல் மது அருந்தி வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இந்நிலையில் செந்தில்குமார் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.* திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் பவுன்ராஜ் 40. கூலி வேலை செய்து வரும் இவர் தினமும் மது அருந்தி வீட்டில் சண்டை போட்டு வந்தார். இதனை அவர் மனைவி கண்டித்தார். இந்நிலையில் பவுன்ராஜ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா பறிமுதல்சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி சர்ச் தெருவை சேர்ந்த செல்வகணேஷ் 19, சாட்சியாபுரத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன் 18, ஆகியோர் சிவகாசி ஹவுசிங் போர்டு பஸ் ஸ்டாப் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். இருவரையும் திருத்தங்கல் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.டூவீலர் விபத்து ஒருவர் பலிசாத்துார்: ஜூலை 13ல் மாலை 4:00 மணிக்கு துாத்துக்குடி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த சரவணகுமார் 23, டூவிலரில் (ஹெல்மெட் அணியவில்லை) துலுக்கன்குறிச்சி ரோட்டில் சென்ற போது எதிரில் தென்காசி மாவட்டம் வாடியூர் அருள் சார்லஸ் தங்கச்சாமி 33, ஓட்டி வந்த லாரி மோதி சம்பவஇடத்தில் பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு திரி பதுக்கியவர் கைதுவிருதுநகர்: சிவகாசி கோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமணி 25. இவர் ஆனைக்குட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள பகுதியில் தகர செட் அமைத்து பட்டாசு தயாரிக்க தேவையான மிஷின் திரிகள் 13 கட்டு, வெள்ளை திரிகள் 18 கட்டு, கருந்திரிகள் 2 கட்டு பதுக்கி வைத்திருந்ததை ஆமத்துார் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர்.டூவீலர் திருட்டுவிருதுநகர்: டி.சி., சோனை கருப்பன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் 49. இவர் ஜூலை 12 இரவு 10:45 மணிக்கு டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு, ஜூலை 13 அதிகாலை 5:30 மணிக்கு வந்து பார்த்த போது திருடு போனது தெரிந்தது. பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.இளம்பெண் மாயம்விருதுநகர்: சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி 19. இவர் ஜூலை 13 காலை 9:30 மணிக்கு கல்லுாரியில் மதிப்பெண் சான்றிதழ் வாங்க செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்