உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கஞ்சா விற்பனை; இருவர் கைதுவிருதுநகர்: ரோசல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் 20. திரவியநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருண் 19. இவர்கள் தடை செய்யப்பட்ட கஞ்சா 700 கிராம் விற்பனை செய்ய வைத்திருந்ததை ஊரகப் போலீசார் கண்டறிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.சட்ட விரோத பட்டாசு தயாரித்தவர் கைதுவிருதுநகர்: வடமலாபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் 35. இவர் ஆனைக்குட்டம் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததை ஆமத்துார் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.சிவகாசி ரிசர்வ் லயனைச் சேர்ந்த வெங்கடேஷ், தேடி வருகின்றனர்.நகை பறிப்புசிவகாசி: சிவகாசி கொங்கலாபுரம் ஜக்கம்மாள் காலனியை சேர்ந்தவர் பொன்ராஜ் 25. இவர் திருத்தங்கல் ரோட்டில் சென்றபோது, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் வழிமறித்து பொன்ராஜ் இடம் இருந்த ஒன்றை பவுன் தங்கச் செயின், அலைபேசியை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை