உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அ.தி.மு.க.வில் தொடருது போஸ்டர் போர் *விரக்தியில் கட்சியினர்

விருதுநகர் அ.தி.மு.க.வில் தொடருது போஸ்டர் போர் *விரக்தியில் கட்சியினர்

விருதுநகர்: விருதுநகரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் ஆதரவாளர்களிடையே ஜாதி தொடர்பான போஸ்டர் போரால் கட்சியினர் விரக்தியடைந்துள்ளனர். விருதுநகர்அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கட்சி நிர்வாகியை கன்னத்தில் அறைந்தார். இதற்கு மேடையில் இருந்த முன்னாள் அமைச்சரான பாண்டியராஜனுக்கு அவர் சால்வை அணிவித்தது தான் காரணம் என கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. அடுத்த நாள், பாண்டியராஜன் பேசியதாக வெளியான ஆடியோவுக்கு பதிலளிக்கும் வகையில் ஆம் நான் குறுநில மன்னன் தான், என ராஜேந்திர பாலாஜி, பேச, இது கட்சிக்குள் புகைச்சலாக எழுந்தது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பாண்டியராஜனுக்கு ஆதரவாகவும், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகவும் நாடார் அமைப்பினர், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் நேற்று புலிதேவன் எழுச்சி படை அமைப்பினர், அ.தி.மு.க.,வில் ஜாதி அரசியலை துாண்டாதே, இங்கு அதற்கு வேலை இல்லை. திருந்திக் கொள் அல்லது திருத்தப்படுவாய் என பாண்டியராஜனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர். கட்சியினரிடையே ஜாதி தொடர்பான போஸ்டர் போரால் அ.தி.மு.க.,வினர் விரக்தியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை