மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
விருதுநகர் : விருதுநகரில் நேற்று கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மாலை நேரம் கனமழை பெய்தது.2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் வெப்பச்சலன வெயிலும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வந்தது. விருதுநகரில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல் மழை பெய்தது. நேற்று மாலை 5:30 மணி முதல் கனமழை பெய்தது. பழைய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வடிந்தது. கடந்த இரு வாரங்களாக நுாறு டிகிரி பாரன் ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வந்த நிலையில் 2 நாட்களாக கன மழை பெய்தது மக்கள் மனதை குளிர்வித்துள்ளது. நேற்று மாவட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் போன்ற பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
12 hour(s) ago
12 hour(s) ago