உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் தாமதம் அல்லாடும் பயணிகள்--

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் தாமதம் அல்லாடும் பயணிகள்--

ராஜபாளையம் : ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் தாமதமாவதால் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் மெயின் ரோட்டில் வெயிலிலும், மழையிலும் அவதிக்கு உள்ளாகின்றனர்.ராஜபாளையத்தில் இயங்கி வந்த பழைய பஸ் ஸ்டாண்ட் இடநெருக்கடி காரணமாக 2022 டிச. முதல் போக்குவரத்து நிறுத்தி புதிய கட்டட பணிகள் நடந்து வருகிறது.ஒரு ஆண்டிற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்புடன் தொடங்கி கடைசியாக ஜூன் மாதம் பணிகள் முடிவடையும் என அறிவிப்பு வந்த நிலையில் பணிகள் முடிந்த பாடில்லை.காந்தி சிலை ரவுண்டானா அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் நின்று செல்லும் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் குடிநீர், தற்காலிக நிழற்குடை, மொபைல் டாய்லெட், மின்விளக்கு என எந்த வசதியும் இதுவரை செய்து தரப்படவில்லை.குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், பெண்கள் வெயில் மழைக்கு ஒதுங்க வழியின்றியும், இயற்கை உபாதைக்கு வசதியின்றி சங்கடத்திற்கு உள்ளாகியும் வருகின்றனர். குடிநீரையும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. இயற்கை உபாதைகளுக்கு உள்ளாகும் பெண்கள், குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி வருகிறது.குடிமகன்களின் அட்டகாசத்திற்கு இடையே பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியதாகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வரும் வரையிலாவது அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ