உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விதிமீறிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

விதிமீறிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

சிவகாசி : சிவகாசி அருகே விதி மீறி இயங்கிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் கார்த்திகேயனுக்கு சொந்தமான அய்யப்பா பட்டாசு ஆலை உள்ளது. இங்கு ஆர்.டி.ஓ., விஸ்வநாதன், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் தாசில்தார் திருப்பதி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பட்டாசு ஆலையில் அதிக வெடி மருந்து இருப்பு வைக்கப்பட்டு பட்டாசு தயாரிக்கப்பட்டது, அதிக பணியாளர்கள் வைத்து மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது, கருந்திரிகளை திறந்தவெளியில் காய வைத்திருந்தது போன்ற விதி மீறல்கள் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ., பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.இதே போல் மாரனேரியில் ராமமூர்த்திக்கு சொந்தமான அக்ஷயா பட்டாசு ஆலையில், திறந்த நிலையில் பிஜிலி வெடிகள் காய வைக்கப்பட்டது, அனுமதி பெறாத கட்டடங்களில் மூலப் பொருட்கள் இருப்பு வைத்திருந்தது, ஆலைக்கு முழுமையாக வேலி இல்லாதது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆலைக்கும் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை