உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில்தீயில் கருகிய மறு நடவு மரங்கள்

அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில்தீயில் கருகிய மறு நடவு மரங்கள்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் பட்டுபோனது. புதிதாக வைக்கப்பட்ட மரங்கள், புல்வெளிகள் தீயில் கருகி பாழாகியது.நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் போது உயிருடன் இருந்த மரங்களை பராமரித்து லாரிகள் மூலம் கொண்டு வந்து புதிதாக துவங்கிய விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்டது. மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக புதிய மரங்களும் நடவு செய்யப்பட்டது.கல்லுாரி வளாகத்தின் அநேக இடங்களில் புல்வெளிகள் வளர்ந்து நிறைந்துள்ளது. ஆனால் இவற்றை பராமரிப்பதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் மழையை நம்பியே மரங்கள் உள்ளது. இதனால் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் போதிய வளர்ச்சி இன்றி பட்டுபோனது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கல்லுாரி வளாகத்தில் மரங்கள் நிறைந்த பகுதியில் தீப்பிடித்தது. தீ பரவியதால் புல்வெளிகள், பட்டுபோன மரங்கள் கருகி பாழானது.இந்த தீ தொடர்ந்து பரவுவதை பணியாளர்கள் அணைத்து கட்டுப்படுத்தினர். ஆனால் சில மரங்கள் தற்போது பாழாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் பட்டுபோகியுள்ள மறு நடவு செய்யப்பட்ட மரங்களை அகற்றி புதிய மரங்களை நடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை