உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் பற்றாக்குறையால் குடியிருப்போர் அவதி

குடிநீர் பற்றாக்குறையால் குடியிருப்போர் அவதி

சிவகாசி : சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி சாமிபுரம் காலனியில் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு உள்ளூர் போர்வெல் மூலமாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி இப்பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறைந்த நேரமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பட்டாசு, அச்சு ஆலைகளில் கூலி வேலை பார்க்கும் இப்பகுதி மக்களால் தினமும் தண்ணீரை விலைக்கு வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே வாரம் ஒரு முறையாவது குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை