மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல புதிய தார் ரோடு அமைக்கப்பட்டது. இங்குள்ள வடிகால்களை சீரமைத்து புதிதாக கட்டாமல் ரோடு அமைத்ததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரோடு சேதமாகும் அபாயம் உள்ளது.விருதுநகர் ---- மதுரை ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் புளுகனுாரணி ரோடு மோசமான நிலையில் இருந்தது. ஒவ்வொரு மழையிலும் ரோட்டின் சேதம் அதிகமாகி கொண்டே இருந்தது. இந்நிலையில் 4 நாட்கள் முன்பு ரோடு போடுவதற்காக பழைய ரோடு கொத்தி போடப்பட்டது. அதில் வடிகால்கள் சேதம் அடைந்திருந்தன. இந்நிலையில் அதையும் சரி செய்து விட்டு புதிய ரோடு போட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் யார் கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் நகராட்சி நிர்வாகம் அடுத்த நாளே ரோடு போட்டது.ரோட்டின் ஓரத்தில் செல்லும் வடிகால் பல இடங்களில் சேதமாகியுள்ளது. இது குறித்து எவ்வித திட்டமிடலும் இன்றி அவசர அவசரமாக ரோடு அமைக்கப்பட்டுள்ளதாக பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் கூறுகின்றனர். புதிய ரோட்டை பாதுகாக்க வடிகாலில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க வேண்டும். அடுத்தடுத்து மழை பெய்தால் ரோடு கடுமையான சேதம் அடைய வாய்ப்புள்ளது. காரணம் இது கனரக பஸ்கள் வந்து செல்லும் ரோடு.எனவே நகராட்சி நிர்வாகம் பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றிய வடிகாலை துார்வாரி ஆழப்படுத்தி தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.
13 hour(s) ago
13 hour(s) ago