| ADDED : ஆக 07, 2024 07:37 AM
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் தனியார் நிறுவன துணை மேலாளர் பாலமுருகன் வீட்டில் ஜூலை 13 இரவில் கதவை உடைத்து பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், ரூ.50 ஆயிரம் கொள்ளை போனது.இதில் ஈடுபட்ட மத்திய பிரதேச தொழிலாளர்களை கைது செய்ய சிவகாசி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் ம.பி., சென்றனர்.இந்த வழக்கில் மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டம் டான்டா அருகே பகோலியைச் சேர்ந்த பார் சிங் 24, ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மேலும் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் ஆலவா 21, கைது செய்தனர். இதில் சஞ்ஜெய் உட்பட இருவரை கைது செய்து நகைகளை மீட்க போலீசார் ம.பி., யில் முகாமிட்டுள்ளனர்.