உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடல்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி, பரியாவரன் அமைப்புகளின் சார்பில் ஒன்பதாவது ஆண்டாக மரக் கன்றுகள் நடுவிழா நடந்தது.மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். பரியாவரன் நிர்வாகிகள் முரளி, சத்யகுமார் முன்னிலை வகித்தனர். பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா, வழக்கறிஞர் சாந்த குமார், ரோட்டரி நிர்வாகிகள் ஆனந்தகுமார், ராஜசேகர் மரக்கன்றுகள் நட்டனர். சேவா பாரதி நிர்வாகி மாரிச்சாமி நன்றிக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ