உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

சிவகாசி: சிவகாசி அருகே கிருஷ்ணம நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகஜோதி தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர் பெருமாள் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆசிரியர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.* எரிச்சநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு ஆலோசனை கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் பாண்டிய லட்சுமி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் இந்திராணி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் அரவிந்தன் பேசினார்.பள்ளி மேலாண்மை குழு ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆசிரியர் கருப்பழகு நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி, பவிதா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை