உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் இன்று பாக்சிங் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு

சிவகாசியில் இன்று பாக்சிங் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் ரமேஷ் செய்திக்குறிப்பு:2024 ஆக. 27 முதல் செப். 10 வரை அபுதாபியில் நடக்க உள்ள ஆசிய பள்ளி மாணவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்தியாவில் இருந்து ஜூனியர், சப் ஜூனியர் பிரிவிலே வீரர்களை தேர்வு செய்ய பாக்சிங் பெட்டேசன் ஆப் இந்தியா ஆக. 8 முதல் 11 வரை ரோத்தக்கில் உள்ள சாய் சென்டரில் தேர்வு போட்டிகள் நடத்தி தகுதியான மாணவர்களை அபுதாபிக்கு அனுப்ப உள்ளனர். இப்போட்டிக்கு தமிழகத்திலிருந்து ஜூனியர், சப் ஜூனியர் பிரிவிலே வீரர்களை தேர்வு செய்ய போட்டிகள் வரும் ஜூலை 27, 28 தேதிகளில் நடக்க உள்ளது. அதன் முன்னோட்டமாக விருதுநகர் மாவட்ட அணி தேர்வு இன்று(ஜூலை 25) மாலை 4:30 மணிக்கு மேல் சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி உண்டு. அங்கீகாரம் பெறாத வீரர்கள் ஜூலை 25 மாலைக்குள் அங்கீகாரம் பெற்று கொள்ள வேண்டும். கலந்து கொள்ளும் வீரர்கள் பிறப்பு சான்று, இரு பாஸ்போர்ட் புகைப்படங்கள் எடுத்து வர வேண்டும். தொடர்புக்கு97916 34373, 94424 18663 எண்களை அழைக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்