உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறை சார்பில் நிலையான உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்ததுவேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். தைவான் பல்கலைக்கழக பேராசிரியர் யோ லம் யெங் மாநாட்டை துவக்கி வைத்து, சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார். கருத்தரங்கில் சென்னை பாலி ஹோஸ் நிறுவன அலுவலர் கிருஷ்ணன், துபாய் பல்கலைக்கழக பேராசிரியர் சித்தரை பொன் செல்வன், போலந்து பேராசிரியர்கள், சீமென்ஸ் கம்பெனி வல்லுநர்கள் பேசினர்.பதிவாளர் வாசுதேவன் சிறந்த கட்டுரைகளுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பேராசிரியர் மாயாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ